விரைவில் பசில் பிரதமராக பதவியேற்பார் – வெளியாகியுள்ள தகவல்

தற்போது அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்றும், விரைவில் பிரதமராக பதவியேற்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பொதுஜன பெரமுனவுக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என சிறி லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை ஏற்கனவே முன்வைத்துள்ளனர் என்ற தகவலையும் இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையில் கலந்துரையாடல்

 

விரைவில் பசில் பிரதமராக பதவியேற்பார் - வெளியாகியுள்ள தகவல் | Basil To Take Over As Prime Minister Soon Report

எனினும் அமைச்சரவையில் அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.