பச்சை நிற அப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதிக்கு
இலங்கையின் பச்சை அப்பிள் தோட்டத்தின் முதல் பழம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக ஜனாதிபத ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்டம் தொடர்பான தகவல்களை விவசாயி எம்.பி. லக்ஷ்மன் குமார காமியின் கல்கமுவவிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அப்பிள் தோட்டத்தை பார்வையிட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பிள் விதை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டு பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இரண்டு ஏக்கரில் வளமான பழங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த தேவையான விதைகளை உற்பத்தி செய்து வழங்க முடியும் எனவும் இலங்கையில் எந்த பிரதேசத்திலும் பயிரிடக்கூடிய வகையில் இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை