விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு தேசிய கொள்கை தயாரிக்க அவதானம்
இலங்கையில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.
சிறுவர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள குழந்தைகளின் நல்வாழ்வு தொடர்பில் ஒன்றியம் எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் விவகார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட வேறு நிறுவனங்கள், பொலிஸ், பெண்கள் பொலிஸ் பிரிவு, யுனிசெப் உள்ளிட்ட நிறுவனங்களுடன், சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கிராமிய, நகர மற்றும் தோட்டப்புறங்களில் உள்ள சிறுவர்களுக்குக் காணப்படும் பல்வேறு சிரமங்களைத் தனித் தனியாகத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துக்களேதுமில்லை