பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு நீதிமன்றம் தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார். குற்றவாளிகளான இருவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு கான்ஸ்டபிள்களும் கடந்த 2015ம் ஆண்டு பெண்ணொருவரை சட்டத்திற்கு புறம்பாக சிறையில் அடைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அது தொடர்பான வழக்கில் இரு கான்ஸ்டபிள்களும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதையடுத்தே அவர்களுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.