குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு , மற்றொருவர் மாயம் !
இந்த சம்பவம் நேற்று (19) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊருவத்த பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் கால்வாய்க்கு மூன்று மாணவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் அள்ளுண்டுள்ளனர். இதன்போது இருவர் பிரேத வாசிகளால் மீட்கப்பட்டு பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 17 வயதுடைய தல்க ஸ்கொட, அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவராவர் . இந்நிலையில் நீரில் அள்ளுண்டு காணாமல் போனவரை தேடும் நடடிக்கைகளில் பொலிஸார் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்துக்களேதுமில்லை