மதுபானசாலைகளுக்கு பூட்டு..! வெளியான அறிவிப்பு

தீபாவளி தினத்தன்று பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மதுபானசாலைகளுக்கு பூட்டு..! வெளியான அறிவிப்பு | Bar Closed In Sri Lanka For Diwali

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கமைய பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலி பிரதேச செயலகங்கள் தவிர்ந்த சகல பகுதிகளிலும் அன்றைய தினம் மதுபானசாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.