பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையர்களின் நிலை!
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு மீன்பிடி படகில், 17 பேர், பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்த நிலையில் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
இந்த படகுடன், இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் பிரான்சின் ரீயூனியனுக்கு மூன்று படகுகள் சென்றுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு மீன்பிடி படகில், 17 பேர், இந்திய பெருங்கடலில் உள்ள பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட ரியூனியன் தீவை நேற்று சென்றடைந்துள்ளனர்.
தீவின் வடக்கு கடற்பகுதியில் இவர்கள் பயணம் மேற்கொண்ட படகு அங்குள்ள கடற்றொழிலாளர்களால் கண்டறியப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 17 பேர்
3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 17 பேருடன் அந்த படகு நேற்று மாலை 5.45 க்கு தீவை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி இரண்டு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் உட்பட 46 பேர் ஒரு மீன்பிடி படகில் ரீயூனியன் தீவுக்கு சென்ற நிலையில் அவர்களில் 39 பேர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதுடன், ஏனைய ஏழு பேர் விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்
ஜூலை 31 ஆம் திகதி, ஆறு ஆண்கள் சென்ற நிலையில், அவர்கள் பிரெஞ்சு பிரதேசத்தில் தங்குவதற்கும் புகலிட விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கும் உரிமை பெற்றனர்.
2018, மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் 2019 க்கு இடையில், இலங்கையிலிருந்து ஆறு படகுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 273 பேர் ரீயூனியனுக்கு சென்றுள்ளனர். இதில் சிலர் ரீயூனியனில் தங்கியுள்ளனர். ஏனையோர் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை