சிறிலங்காவில் புதிய திட்டத்தின் ஓய்வூதியம்.! வெளியான தகவல்
இலங்கை மக்களால் செலுத்தப்படும் வரிகளுக்கமைய புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வரியின் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புதிய திட்டம்
இலங்கையில் வரி செலுத்தும் மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் பங்களிப்பின்படி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் இதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் எந்த நேரத்திலும் வீழ்ச்சியடையும் அபாயம் இருப்பதால் சமூக பாதுகாப்பு வரி கட்டாயம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் முறையாக வரி செலுத்தும் பட்சத்தில் புதிய ஒய்வூதிய முறையை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை