யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வேன்; உயிர் தப்பிய சாரதி!..
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, மாவட்டபுரம் பகுதியில் பயணித்த வேன் ஒன்று நேற்று (21) இரவு தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது.
வாகனம் தீப்பிடித்த போது சாரதி வாகனத்திலிருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை கடற்படைத் தளத்தின் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தலையிட்டு தீயை அணைத்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை