அனுராதபுரத்திற்கு இன்று விசேட ரயில்
அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்த தேரின் இறுதிக் கிரியைகள் அனுராதபுரத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
இன்று அதிகாலை 4.40 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்ட விசேட ரயில் அனுராதபுரத்திலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு இன்று இரவு 9.20 மணிக்கு கோட்டையை
வந்தடையவுள்ளது.
மருதானை, ராகம, கணேமுல்ல, கம்பஹா, வெயங்கொட, பல்லேவெல, மீரிகம, அம்பேபுஸ்ஸ, அலவ்வ, பொல்கஹவெல, பொத்துஹெர, குருநாகல், முட்டெட்டுகல, வெல்லவ, கனேவத்தை, நாகொல்லாகம, மஹோ சந்தி, அம்பன்பொல, ஸ்தலபுராத்தகம, செனரவத்தகம, செனரவத்தகம, தம்பத்தகம, அனுராதபுரம் புதிய நகரம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் புகையிரத நிறுத்தப்படும்.
கருத்துக்களேதுமில்லை