சரத் வீரசேகர 22ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தார்
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்ததாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் முடிவில் நடைபெற்ற பிரிவின் போது ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 1 வாக்குகளும் பதிவாகின. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.
அதனைத் தொடர்ந்து, சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்காக நடைபெற்ற பிரிவினையில் 174 வாக்குகள் ஆதரவாகப் பதிவாகின. மூன்றாம் வாசிப்புப் பிரிவின் போது, சரத் வீரசேகரவும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை