திடீரென மூடப்பட்ட கனடா விமான நிலையம்…! வெளியாகிய பின்னணி!!

கனடாவின் விமான நிலையமொன்று திடீரென தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள பில்லி பிஸொப் என்னும் விமான நிலையமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டது.

சந்தேகத்திற்கு இடமான பொருள் காரணமாக இவ்வாறு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வெடிபொருள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒர் பொதியை கண்டு பிடித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

வெடிகுண்டு அச்சுறுத்தல்

திடீரென மூடப்பட்ட கனடா விமான நிலையம்...! வெளியாகிய பின்னணி | Canada Airport Lockdown

இந்த சந்தேகத்திற்கு இடமான வெடிபொருள் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விமான பயணங்களுக்காக காத்திருந்த பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இரண்டு விமானங்கள ஹமில்டன் விமான நிலையத்திற்கு திருப்பட்டதாக எயார் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் திடீரென மூடப்பட்டதனால் அசௌகரியங்களை எதிர்நோக்கிய விமான பயணிகளிடம் விமான நிலைய நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.