கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு…! மாவீரர் தின அனுமதி கோரல் (கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி)

வருகின்ற கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருவது தாங்கள் அறிந்ததே. காரணம் நாங்கள் மறந்திருந்தாலும் ஒவ்வொரு வருடமும் அரச அடக்கு முறையால் அதனை நாங்கள் நினைவுகூர்வதற்கு நீங்கள் துணையாக இருக்கின்றீர்கள் அதற்கும் முன்னைய ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் நன்றி.

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தலில் நடைபெற்ற பிரச்சினைகள் தாங்கள் அறிந்ததே.

“மனிதர்கள் இல்லா ஊருக்கு நாய் தான் ராஜாவாம்”

என்பது போல

“அந்த இறைவனுக்கு பிறகு”

இன்றைய தமிழர்களின் தலமை தாங்கள் தான் என நினைக்கும் அரசியல் தலமையின் நிலை ஆச்சு .

“நிறை குடம் நீர் தளும்பாது குறைகுடம் கூத்தாடும்”

என்பதுபோல களமாடியவர்களை எல்லாம் வன்முறைக்கு பின்னர் வளர்ந்தவர்களால் துரோகி பட்டம் கட்டும் சட்டத்தரணிகளின் காலத்தில் எம்மினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நினைக்கையிலே என் வயிறு பற்றி எரிகின்றதையா.

தங்களிடம் ஒரு உதவியை கேட்டு நிற்கின்றோம் எங்கட மக்கள் சார்பாக…

இந்த வருட மாவீரர் தினத்தை மட்டும் செய்வதற்கு பூரண அனுமதியை தாருங்கள் ஐயா.

காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

குறித்த அனுமதியை தந்தால் வருங்காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தாங்கள் சம்மந்தப்பட்ட அரசாங்கம் எந்த செயலையும் செயற்படுத்ததேவையில்லை
காரணம் ஒரு நினைவு வணக்க நிகழ்வுக்கான பொதுச் சுடரின் கனதி தன்மை/ மதிப்பு தெரியாதவன் எல்லாம் எமது தலமை பதவியில் இருக்கின்றார்கள் . தியாக தீபம் திலீபனின் வணக்கநிகழ்வு ஒரு குறித்த இடத்தில் மட்டும் தான் நினைவேந்தப்பட்டது குறித்த இடத்திலே இவ்வளவு பிரச்சினை என்றால் ஈழநிலத்தில் அமையப் பெற்ற மாவீரர் துயிலுமில்லங்கள் மொத்தம் 27 ஆகவே குறித்த மாவீரர் தினத்தை தங்களின் அனுமதியுடன் தந்தீர்களானால் அடுத்தவருடம் குறித்த நிகழ்வுகளை செய்வதற்கு எந்த தலமையும் இருக்கவும் மாட்டார்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு
“ஒருகூட்டு கிளியாக இருந்தவர்கள் எல்லாம் சீர்குலைந்து விடுவார்கள்”

“இது ஆயுத யுத்தம் அல்ல பொதுச்சுடரேற்றும் யுத்தம்”

வருங்காலத்தில் தங்களுக்கோ அல்லது முப்படையினருக்கோ எந்த வேலைப்பளுவும் இருக்காது என்பது வெள்ளிடைமலை என்பதனை கூறிக்கொண்டு இம்மடலை தற்காலிகமாக நிறைவு செய்கின்றேன்.

அழிக்கப்படும் இனத்தின் வலிகளுடன்
கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.