லீசிங் செலுத்த தவறியவர்களின் வாகனங்களை கொண்டு செல்ல அதிகாரம் இல்லை..! வெளியான தகவல்

லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறி, நிர்கதிக்குள்ளாகியுள்ள நபர்களின் வாகனங்களை சீசர்கள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்வதற்கு எந்தவித அதிகாரங்களும் அவர்களுக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தில் எந்தவித அதிகாரமும் கிடையாது

லீசிங் செலுத்த தவறியவர்களின் வாகனங்களை கொண்டு செல்ல அதிகாரம் இல்லை..! வெளியான தகவல் | Sri Lanka Vehicle Lease Vehicle Cease

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” கொழும்பு – என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஊடக சந்திப்பிற்கு, காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது எந்தவொரு ஊடக சந்திப்பும் இவ்வாறு நடத்தப்பட்டிருக்காது.

விசேட காவல்துறை பாதுகாப்பை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். ஊடக சந்திப்பிற்கு காவல்துறை பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்பட்டமையானது, லீசிங் மாஃபியா எந்தளவிற்கு கொடூரமானது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும்.

லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறும் பட்சத்தில், அதனை சீசர்களுக்கு கொண்டு செல்ல சட்டத்தில் எந்தவித அதிகாரமும் கிடையாது.

சுற்று நிரூபத்திலும் அவ்வாறான அதிகாரங்கள், சீசர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளோம். மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் லீசிங் நிறுவனங்களுடன் டீல் செய்வதாக தமக்கு சந்தேகம் எழுந்துள்ளது “, எனக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.