மீண்டும் நல்லாட்சிக்கான சாத்தியம் – சர்வதேசத்தின் கருதுகோளை வெளியிட்ட சஜித்
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் நல்லாட்சி ஏற்படும் என்ற கருதுகோள் சர்வதேசத்துக்கு உள்ளதாகவும், இதனால் குறுகிய அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தமது கட்சி வாக்களித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மொட்டுவின் எதேச்சதிகார அரசாங்கம்
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் நிதியமைச்சர், பிரதமர், அதிபர் ஆகியோர் பதவி விலகிய போதிலும், மொட்டுவின் கட்டளையின் கூடிய அரசாங்கமே தற்போது இயங்கி வருகிறது.
விவசாயிகளின் உரத்தையும், மீனவர்களின் எரிபொருளையும் தடுத்து நிறுத்திய அதே எதேச்சதிகார அரசாங்கம் தான் மறைமுகமாக நாட்டை ஆள்கிறது.
நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்தாசை
கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளுக்கு திரிபோஷா இல்லாத சந்தர்ப்பத்தில், எந்தச் சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியாக அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டோம்.
எதிர்க்கட்சியில் இருந்த வண்ணம் நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்குவோம் என்றார்.
கருத்துக்களேதுமில்லை