அமரர். புஸ்பராசா நற்பணி மன்றத்தின் இலவச அமரர் ஊர்தி சேவை ஆரம்பம்!
எமது அமரர் புஸ்பராசா நற்பணி மன்றத்தின் அமரர் புஸ்பராசா இலவச அமரர் ஊர்தி சேவையானது வறிய மக்களின் மரண நிகழ்வுக்கான அவர்களின் உடல்களை ஏற்றி இறக்குவதற்கான சேவை ஆரம்பிக்கப்பட்டு தற்போது இப் பணி நடைபெற்று வருகின்றது
இவ்இலவச அமரர் ஊர்தி சேவைக்காக வறிய குடும்பத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்திடம் இருந்தோ அல்லது உறவினர்களிடம்.இருந்தோ ஒரு ரூபாய் ஏனும் பணம் பெறுவதில்லை அது மட்டுமல்ல இப்பணிக்காக எரிபொருளோ, வாகன சாரதி கொடுப்பனவோ பெறுவதில்லை
இவ் வாகனத்தை காரணம்.காட்டி யாரேனும் பணம், அல்லது எரிபொருள் கேட்டால் எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம் என்பதனை அன்போடு அறியத்தருகின்றோம்
மிக விரைவில் கிராம ரீதியாக அமரர் புஸ்பராசா மரண உதவிச்சங்க நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு இன்னும் தேவையான சில உதவிகளை குறிப்பாக தகரக்கொட்டகை, கதிரை என்பன இச்சேவைக்கு வழங்கி வைக்க தீர்மானித்துள்ளோம்
அத்தோடு எதிர்வரும் நாட்களில் இவ் வாகன சேவைக்கான எரிபொருள், வறிய மரண நிகழ்வுக்கான பூதவுடல் பேழை என்பனவற்றை பிரதேசத்தில் இருக்கின்ற சமூக சிந்தனையுள்ள கொடையாளிகள் வழங்க முன்வந்துள்ளனர் அவர்களால் வழங்கப்படும் உதவிகள் அமரர் புஸ்பராசா மரண உதவிச்சங்கத்தின் பிரதேச நிர்வாகம் ஊடாக மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பிலையே அதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டு உரிய முறையில் வரவு, செலவு வெளிப்படையாக அனைவரின் பார்வைக்காக வெளிப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்படும்
தற்போது இச்சேவைக்காக எதுவித உதவிகளையும் வழங்க வேண்டாம் என்பதனை அன்போடு அறியத்தருகின்றேன் இவ் விடயம் தொடர்பாக எம்மோடு தொடர்பு கொள்ளலாம்
நன்றி
ச.ரூபன்
ஸ்தாபகர்
தாய்த்தமிழ்பேரவை, மற்றும்
ஒருங்கிணைப்பாளர்
அமரர் புஸ்பராசா நற்பணி மன்றம்
தொடர்புக்கு 0776264916
கருத்துக்களேதுமில்லை