தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பான மேலதிக தகவல்கள்!!

தென் கொரியாவில், தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் கண்டி உடதலவின்ன, மடிகே பகுதியைச் சேர்ந்த ஜி.ஐ. முனவ்வர் முஹம்மது ஜினாத் என்ற 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களாக கொரியாவில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நாட்டிற்கு வந்து திருமணம் செய்து கொண்டு மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார்.

“இறந்த ஜினத்துக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது. திருமண விழா முடிந்து கொரியா சென்று ஒன்றரை மாதங்கள் ஆகிறது. அவரது தாயும் தந்தையும் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த மரணத்திற்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று இறந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.