இலங்கையர்களுக்கு பேரிடி..! ரணில் வெளியிட்ட அறிவித்தல்
2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் விடுதியில் நேற்றுமுன்தினம் (31) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டும்.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய அதிபர், ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களேதுமில்லை