தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை   மிரட்டிய பொதுஜன பெரமுனை கட்சியின் உறுப்பினருக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

காணி பிரச்சனை ஒன்று தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை   அச்சுறுத்திய பொதுஜன பெரமுனை கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் தலைமை பீட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது காணிப் பிரச்சனை ஒன்று தொடர்பில் பொலிஸ்    உத்தியோகத்தரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய குறித்த உறுப்பினர் யார் மாவட்ட அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருகை தராத பட்சத்தில் வடமாகாண மூத்த பொலிஸ் அதிகாரியை கொண்டு இடமாற்றம் செய்வேன் என்று கடும் தொனியில் அச்சுறுத்தியுள்ளார் இதனால் தனது கடமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என மன உளைச்சலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தரை   தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம்   பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்த மிக வினைத்துடன் செயல்படும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சில தென்னிலங்கை அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் இடமாற்றம் செய்வேன் என  அச்சுறுத்தும் சம்பவங்கள் யாழில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது உயர் அதிகாரிகளும் எந்தவித விசாரணைகள் இன்றி தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதற்காகவும் இவ்வாறு இடமாற்றங்களை செய்து வருகின்ற அமையும் ஆங்காங்கே இடம்பெறுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.