கொழும்பில் டெங்கு உச்சத்தை எட்டக்கூடும் – மருத்துவ நிபுணர்
இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு நோய் உச்ச மட்டத்தை எட்டும் என வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர் மாதத்திலும், அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் டெங்கு உச்சக்கட்டத்தை எட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் தற்போது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், நகரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான நுளம்புகள் அழித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பரில் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியிலும் உச்சநிலையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 586 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன, மேலும் நாடு முழுவதும் இதுவரை 49,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை