நியமிக்கப்படாத நாடாளுமன்ற குழுக்களை கூடிய விரைவில் நியமிக்க ஜனாதிபதி பணிப்பு !

நியமிக்கப்படாத சகல நாடாளுமன்ற குழுக்களையும் விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மிக்க தசநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எனவே அந்த குழுக்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று ஆரம்பித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், 17 துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.