பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவான் நீதிமன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், நீதிமன்றில் அமைதியாக இருக்குமாறும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தால் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுமாறும் சம்பந்தப்பட்ட நபருக்கு பணித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தி, தாக்கியதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நானுஓயாவை பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேகநபர், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.