அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி பாடசாலையின் விஞ்ஞானக் கழகத்தினால் திருசியம் நூல் வெளியீடு.
விஞ்ஞானக்கழக தினமானது கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 03/11/2022 வியாழக்கிழமை இன்று காலை 10.30 மணியளவில் பிரதி அதிபர் திரு.C.மதியழகன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வுகளுக்கு வருகை தந்த அதிதிகளை பண்டு வாத்தியத்துடன் மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்.
இன் நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக வருகை தந்த அதிதிகளினால் மங்கள விளக்கேற்றலினைத் தொடர்ந்து. இன் நிகழ்விற்கு அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் நிர்வாக பிரிவு பிரதிக் கல்விப் பண்ணிப்பாளர் திரு.S.சுரனுதன் அவர்களும் சிறப்பு அதிதியாக பாடசாலையின் முன்னாள் அதிபர்.அ.சுமன், திருக்கோவில் கல்வி வலயத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் திரு. எஸ். லோகனாதன், வைத்தியர் திருமதி.R.தர்சிக்கா அவர்களும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. எஸ். பி.அகிலன், விஞ்ஞான பாட ஆசிரியர்கள்,பிரதி அதிபர்கள், எனைய ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள்,என பலரும் கலந்து கொண்டனர். மேலும் வருகை தந்த அதிதிகளுக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மேலும் கழகத்தினால் திருசியம் நூல் மூன்றாம் பிரதி அதிதிகளுக்கு வெளியீட்டு வைக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை