மல்லாகம் நீதவான் நலன்புரி நிலைய மக்களுக்கு உலருணவு.

மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் 20குடும்பங்களுக்கு அண்மையில் “ஊரோடு உறவாடு நாராந்தனை உறவுகள்” அமைப்பினரால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த கால போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடத்தினை விட்டு இடம்பெயர்ந்து மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் குடும்பங்களுக்கே இவ்வாறு தலா இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.