வவுனியா விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவியும் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா – நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகி மூவர் பலியான விபத்தில் உயிரிழந்தவர்களில் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த யுவதியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (05) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.