புலம்பெயர்ந்தவருக்கு 12 ஆண்டுகளின் பின் அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான குடும்பம்!

குடும்ப இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டு விளையாடி வந்த நபர் ஒருவர் மாபெரும் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

கனடாவின் றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.

லொட்டோ 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளார்.

மார்லன் லிடோ என்ற 43 வயதான நபரே இவ்வாறு பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளார். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்னதாக கனடாவில் குடியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பரிசுத் தொகை

புலம்பெயர்ந்தவருக்கு 12 ஆண்டுகளின் பின் அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான குடும்பம் | Lucky Draw Lottery Ticket Win Lucky Person Dollar

தனது குடும்பத்திற்கு மிக முக்கியமான திகதிகளைக் கொண்ட இலக்கங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக லொத்தர் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். முதலில் தாம் 5000 டொலர் வெற்றிகொண்டதாகவே கருதியதாகவும் லிடோ தெரிவித்துள்ளார்.

தாங்கள் இந்த பரிசுத் தொகை வெற்றியை நம்பவில்லை எனவும், மீளவும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டதாகவும், எத்தனை பூச்சியங்கள் உள்ளது என்பதனை எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த லொத்தர் சீட்டு வெற்றியின் மூலம் கிடைக்கும் பணம் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என லிடோ குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.