வெளிவிவகார கொள்கையை முறையாக கடைபிடிக்காமையே கோட்டாவின் ஆட்சி வீழ்ச்சிக்கு காரணம்!

கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிமைக்கு, வெளிநாட்டு கொள்கையும் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிவிவகார கொள்கையை முறையாக கடைபிடிக்காமை காரணமாகவே, அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.

அத்துடன் பொருளாதாரம் தொடர்பிலான முறையான ஆலோசனைகளை அவர் ஏற்றுக்கொள்ளாமையும் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும். இதன் ஒட்டுமொத்த பிரதிபலனாகவே கோட்டாபய ராஜபக்சவிற்கு உதவுவதிலிருந்து அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பின்வாங்கிக்கொண்டன.

ஆகையினால் தவறுகளை உணர்ந்து நாங்கள் மீளெழுவதற்கான சந்தர்ப்பத்தை இனங்காண வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.