இலவசமாக கொடுங்கள்: பிரித்தானிய மாணவர்களுக்காக பிரதமர் ரிஷியிடம் பிரபலம் ஒருவரின் கோரிக்கை
பிரித்தானியாவில் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவை வழங்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கை பிரபல பாடகர் ஜெய்ன் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்ஃபோர்ட் பகுதியில் தமது இள வயதில் இலவச உணவை நம்பியிருந்தவர் முன்னாள் One Direction குழுவின் பிரபல பாடகர் ஜெய்ன் மாலிக். இவரே ஆயிரக்கணக்கான ஏழை மாணர்கள் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக்கிடன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிரித்தானியாவில் வறுமையில் வாடும் சுமார் 800,000 குழந்தைகள் கடுமையான தகுதி விதிகள் காரணமாக இலவச பள்ளி மதிய உணவை இழக்கின்ற நெருக்கடியில் உள்ளனர். குறிப்பிட்ட சில அமைப்புகள் முன்வந்து பிரித்தானியாவில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசப் பள்ளி உணவுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையிலேயே பாடகர் ஜெய்ன் மாலிக் உருக்கமான கடிதம் ஒன்றை பிரதமர் ரிஷி சுனக் அறிய எழுதியுள்ளார். அதில், இந்த குழந்தைகள் கவனமின்மையால் அவதிப்படுகிறார்கள், மதிய உணவு வாங்க முடியாமல் மிகவும் பசியுடன் இருக்கும் சிலர் பள்ளி கேன்டீன்களில் உணவைத் திருடுகிறார்கள்.
திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை எண்ணி அவர்கள் வெட்கப்படுகிறார்கள், இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. பிராட்ஃபோர்ட் பகுதியில் வளர்ந்த எனக்கு அப்படியான அனுபவம் உண்டு, நானும் இலவச மதிய உணவு சாப்பிட்டு வளர்ந்தவன் தான்.
மட்டுமின்றி, உணவு வாங்க வேண்டுமா? கடனாளியாக வேண்டுமா என பெற்றோர்கள் முடிவெடுப்பதை தடுக்க அனைவருக்கும் யுனிவர்சல் கிரெடிட் ஊடாக பயன்பெறும் வகையில் திட்டமொன்றையும் வகுக்க வேண்டும் என ஜெய்ன் மாலிக் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒரு பிரதமராக உங்களால் கண்டிப்பாக முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஜெய்ன் மாலிக், 17ம் திகதி சமர்பிக்கும் நிதி நிலை அறிக்கையில் இதற்கான பதில் கிடைக்கும் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது விடுமுறை நாட்களில் ஏழை குழந்தைகளுக்கு உணவளிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேம்ண்டும் என பிரித்தானிய கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை