ஜெர்மனியில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!
ஜெர்மனியில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் ஒருவர் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் வாழும் பெண் ஒருவர் பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு வினோத முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
கடந்த வாரம் 110 அவசர எண்ணை அழைத்த ஒரு பெண் தனது காரில் உள்ள சிலந்தியை கண்டுபிடிக்க உதவுமாறு கூறி பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் தெற்கு ஜேர்மனிய மாநிலமானபாடன்-வூர்ட்டம்பேர்க் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு இந்த அழைப்பு வந்தது.
அந்தப் பெண் தனக்கு அவசரமாக உதவி தேவைப்படுவதாகவும், தனது காரில் ஒரு பெரிய சிலந்தி இருப்பதாகவுதம் தன்னால் வாகனம் ஓட்டுவதைத் தொடர முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
உடனடியாக பொலிஸ் கார் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் காரில் இருப்பதாக கூறப்பட்ட சிலந்தியையும் பொலிஸார் தீவிரமாக தேடியுள்ளனர். எனினும் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வெளிப்படையாக அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த இது போதுமானது இருந்தது என ஒரு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சேதனை நடவடிக்கையின் பின்னர் அந்த பெண்ணால் பயணத்தைத் தொடர முடிந்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
வியர்வை, இதயத் துடிப்பு மற்றும் பதற்றம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் கடுமையான நோயியல் பயத்தினால் அந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை