சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு ‘மக்னெற்சி’ பாணியில் தடை! பிரித்தானியாவில் அழுத்தம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் மனிதஉரிமை நிலவரங்கள் மற்றும் பொருளாதார நிலவரங்கள் தொடர்பான விவாதத்தில் இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காபடை அதிகாரிகளுக்கு தடைகோருவது உட்பட்ட விடயங்கள் அலசப்பட்டுள்ளன.

தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் எலியட் கோல்பேர்ணால் நேற்று (9) பிற்பகல் 2.40 க்கு இந்த விவாதம் ஆரம்பித்து வைப்பட்டிருந்தது.

சிறிலங்கா மீதான அழுத்தம்

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு

 

இந்த விவாதத்தில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மக்டொனாக் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர் எட்டேவி மற்றும் திரேசா வில்லியேர்ஸ் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்து தமது உரைகளில் சிறிலங்கா மீதான அழுத்தங்களையும் தமிழருக்குரிய அரசியல் தீர்வையும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த விவாதத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் மீது இழைக்கபட்ட போர்க்குற்றங்கள், ராஜபக்ச அதிகாரமையத்தின் முறைகேடுகள், தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைகள் உட்பட்ட விடயங்கள் எடுத்துரைக்கபட்டிருந்தன.

அத்துடன் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடனுதவி மீதான கட்டுப்பாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

இனப்படுகொலை

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு

 

இந்த விவாதத்தில் கருத்துரைத்த தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மக்டொனாக், இலங்கையில் தமிழ்மக்கள் மீது இனப்படுகொலை நடத்தப்பட்டது என்ற விடயத்தை அழுத்தமாக வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காபடை அதிகாரிகளுக்கு மக்னெற்சி பாணியில் தடைவிதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.