மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா மீது முட்டை வீச்சு: நாடு அடிமைகளின் இரத்தத்தால் ஆனது என கோஷம்

பிரித்தானியாவின் யோர்க் நகருக்கு மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா சுற்றுப்பயணம்.

மூட்டை வீச முயன்ற இளைஞர் கைது.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மீதும் அவர் மனைவி மற்றும் குயின் கான்சார்ட் கமிலா மீது இளைஞர் ஒருவர் மூட்டை வீசி முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் யோர்க்(york) நகருக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கன்சார்ட் கமிலா ஆகிய இருவரும் விஜயம் செய்தனர், அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

யோர்க் நகர மக்களை சந்தித்து பேசி அவர்களுடைய வாழ்த்துகளை மன்னர் மூன்றாம் சார்லஸும், குயின் கன்சார்ட் கமிலாவும் பெற்றுக் கொண்டு இருந்தனர்.

 

 

 

அப்போது யாரும் எதிர்பாராத வகையில், இளைஞர் ஒருவர் மன்னர் சார்லஸ் மீது மூட்டைகளை வீச முயன்றார். அதிர்ஷ்டவசமாக அவை அனைத்தும் தரையில் விழுந்து நெருங்கியதால் மன்னர் மூன்றாம் சார்லஸும் ராணி கன்சார்ட் கமிலாவும் பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பினர்.

இதனை தொடர்ந்து இருவரும் உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

 

மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா மீது முட்டை வீச்சு: நாடு அடிமைகளின் இரத்தத்தால் ஆனது என கோஷம் | Man Thrown Eggs At King Charles And CamillaPA

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர், இளைஞர் கைது செய்யப்பட்ட போது அவர் இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் உருவாக்கப்பட்டது என கோஷம் எழுப்பியதாக தகவல் வெளிவந்துள்ளது.

மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா மீது முட்டை வீச்சு: நாடு அடிமைகளின் இரத்தத்தால் ஆனது என கோஷம் | Man Thrown Eggs At King Charles And Camilla

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.