இன்று கொட்டித்தீர்க்கும் கன மழை..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை
நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை – பலத்த காற்று
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)
கருத்துக்களேதுமில்லை