ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் படி 6 பேருக்கும் விடுதலை வழங்கி தீர்ப்பளிக்கப்படுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களின் சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.
அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை