கனேடிய பிரபலத்திற்கு 7.5 மில்லியன் டொலர் அபராதம்?
பெண் ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கனடாவின் பிரபல இயக்குனர் போல் ஹக்கீஸிற்கு ( Paul Haggis) 7.5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜுரிகள் சபையினர் இவ்வாறு அபராத தொகையை விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஹக்கீஸ், மீடூ(MeToo) சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் தம்மை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அதில் ஹக்கீஸும் ஒருவர் என பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கனேடியரான ஹக்கீஸ் குறைந்தபட்சம் 7.5 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஹக்கீஸ் “மில்லியன் டொலர் பேபிஸ்” மற்றும் “க்ரேஷ்” போன்ற திரைப்படங்களுக்காக ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
Haleigh Breest என்ற பெண்ணே இவ்வாறு இயக்குனர் ஹக்கீஸிற்கு எதிராக குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு பெரு மகிழ்ச்சி அளிப்பதாக பிரீஸ்ட் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜுரிகளின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கும் வகையிலானது என ஹக்கீஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை