மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடை – சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தல்!

சிறிலங்கா அரசாங்கத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுடன் இணங்கி 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதித்து சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்கா

மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடை - சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தல்! | Sri Lanka Economic Embargo United Kingdom Un Gsp

 

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழு விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும். ஜி.எஸ்.பி. பிளஸ் பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இராணுவத்திற்கான அதிகப்படியான செலவினங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய பங்குதாரராக பிரித்தானியா

மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடை - சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தல்! | Sri Lanka Economic Embargo United Kingdom Un Gsp

 

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரராக உள்ள பிரித்தானியா, தமிழர்களுக்காக, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய நிதியுதவிக்கு நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.