பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான தகவல்

நாட்டில் தற்போது ஏற்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தினை அடுத்து பேருந்து கட்டண மாற்றம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, நேற்று முதல் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டண திருத்ததில் மாற்றம் இடம்பெறாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் எவ்வித உடன்படிக்கைகளும் ஏற்படவில்லை எனவும் அந்த சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் விலை

 

பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான தகவல் | No Change In Bus Fare Fuel Crisis Today Price

மேலும், ஒக்டோபர் 17ம் திகதி டீசல் விலை ரூ.15 குறைக்கப்பட்டு நேற்று (11) ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.