நட்சத்திர ஹோட்டலில் ரணில் வழங்கவிருந்த பிரமாண்ட விருந்து இறுதி நேரத்தில் இரத்து!
ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் வழங்க திட்டமிடப்பட்டிருந்த இரவு விருந்தினை இறுதி நேரத்தில் இரத்து செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அரச செலவுகளைக் குறைப்பதாகக் கூறி, வரவு-செலவுத் திட்டத்தின் முடிவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பாரம்பரிய தேநீர் வைபவத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்ததை அடுத்து, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வரவு செலவுத் திட்டம் தொடர்பான செயலமர்வை அலரி மாளிகளியில் நடத்த ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். பின்னர் இன்று மாலை நட்சத்திர ஹோட்டலில் சூப்பர் டின்னர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது .
ஆனால் இது தொடர்பில் ஊடகங்கள் வெளிப்படுத்தியதையடுத்து எழுந்த எதிர்ப்பாளர்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இரவு விருந்தினை இரத்து செய்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு செலவு திட்டம் குறித்து விளக்கமளிக்க தீர்மானித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை