வரலாற்றில் முதல் முறை வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ள பேத்தி திருமணம்!
அமெரிக்க அதிபராஜ ஜோ பைடன் பேத்திக்கு ( Naomi Biden) திருமணம் நடைபெற உள்ள நிலையில் உலகத் தலைவர்கள் அமெரிக்கா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவி ஏற்றார்.
அத்துடன் அவர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் .
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் பேத்தி நோமி என்பவரின் திருமணம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
அதேவேளை இதுவரை அமெரிக்க வரலாற்றில் அதிபர்களின் மகன் மகள்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ள நிலையில் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க அதிபரின் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை