விவசாயிகளின் பயிர் காப்பீடு கால வரம்பை நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம்.
தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பெற இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என முதலமைச்சர் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்றோடு முடிவடைந்த குறித்த காப்பீட்டினை நீடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை