ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே 2022 O/L பரீட்சை – கல்வி அமைச்சர்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை விடுத்தார்

O/L பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரலில் நடத்த எதிர்பார்த்தாலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையால், மேலும் தாமதங்கள் தவிர்க்க முடியாதவை என்றார்.

பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.