சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – தரிசன நேரம் அதிகரிப்பு
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருவதால் இன்று முதல் சாமி தரிசனம் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தரிசன நேரம் நீட்டிப்பு
மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் சபரிமலையில் காலை 4 முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 முதல் இரவு 11 மணி வரையும் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை