ADK பற்றி ஷிவினின் குற்றச்சாட்டு: கொந்தளிக்கும் இலங்கை பெண்
பிக்பாஸ் நீதிமன்றத்தை ஷிவின் நேற்று அவமதித்ததாக ஜனனி குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளியேறிய போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இதில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் கடந்த ஐந்து வாரங்களாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆறாவது வாரத்திற்காக நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏடிகே நீதிபதியாகவும் அசீம், ஆயிஷா, சிவின் ஆகியோர் வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் முதல் வழக்கு
மேலும் நேற்றைய தினம் முதல் வழக்காக அமுதவாணன் அம்பாகவும் ஜனனி வில்லாகவும் செயல்பட்ட வழக்கு விக்ரமனுக்கு எதிராக பேசப்பட்டது.
இதில் அமுதவாணன் , ஜனனி தரப்பு வெற்றி பெற்றுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத ஷிவின் நீதிமன்றத்தில் கத்தி ஆர்பாட்டம் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ஜனனி ஷிவினிடம் சென்று “நீ பேசியது தவறு நீதிபதியின் தீர்ப்பை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டியா? ” இது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார்.
இதற்கு ஷிவினும் தனலெட்சுமியும் இது ஒரு தீர்ப்பே இல்லை என்று வாதித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை