அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

நாளை (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு | Reduction In The Prices Of Essential Food Items

 

இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 495 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 255 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.