விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கம் இதுதான்..!
அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை, அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம், ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை, சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார். ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள், தியாகம் செய்தார்கள்.
ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.
கருத்துக்களேதுமில்லை