நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணியை கொட்டகலை பிரதேச சபை விற்க முயற்சி!
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 3 ஏக்கர் காணியை கொட்டகலை பிரதேச சபை விற்பனை செய்வதற்கு முயற்சிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அபிவிருத்தி வேலைத்திட்டம் என்ற போர்வையில் கொட்டகலை பிரதேச சபை குறித்த காணியை பகிர்வதோடு, அதில் பல ஊழல் இடம்பெறுகின்றமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை