பிரித்தானிய மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய மக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் பல குடும்பங்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இந்த நெருக்கடி காரணமாக பிரித்தானிய குடும்பங்கள் பல செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு போதிய உதவிகளை முன்னெடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொடர்பில் 20 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டுவரும் மார்க் சீட் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார். கார்டிஃப், ட்ரோபிரிட்ஜ் பகுதியில் சமுதாய உணவுக் கூடம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றார்.

கார்டிஃப் பகுதியில் சுமார் 160 குடும்பங்களுக்கு உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை அளித்து உதவிவரும் இவரது அமைப்பானது, உணவு பற்றாக்குறையை போக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அவர் தெரிவித்ததாவது,பணவீக்கம் அதிகரித்துள்ளதால், இனி கொள்கைகள் என்பது மக்கள் மீது கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்கள் மீதல்ல.

பசியை போக்க மக்கள் செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்வது என்பது தாங்க முடியாத அதிர்ச்சியை அளிக்கின்றது என கூறியுள்ளார்.

கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் நாட்டில் ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இதைவிட மோசமான நிலை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, இறைச்சி மற்றும் ரொட்டி ஆகியவை கடந்த மாதம் 42 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது 1980ற்கு பிறகு மிக அதிகம் எனவும் கூறுகின்றனர்.

இதேவேளை 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு சராசரி குடும்பம் 4,960 பவுண்டுகளை பல்பொருள் அங்காடியில் செலவழிக்கும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.