கனடாவிலும் தமிழகத்திலும் ஒரேநாளில் FINDER திரைப்படத்துக் கான பூஜைநடைபெற்றது.

கனடாவிலும் தமிழகத்திலும் ஒரேநாளில் ராஜீவ் சுப்பிரமணியம் தயாரிக்கும் FINDER திரைப்படத்துக்
கான பூஜை 28.11.22 சிறப்புற நடைபெற்றது. உங்களுடன் இணைந்து எங்கள் வாழ்த்துகளும்….

கனடாவில் இயங்கி வரும் ஆரபி படைப்பகம் தாயகத்தில் நமது கலைஞர்களின் பல படைப்புகளுக்கு நல்லாதரவு வழங்கி வந்தது நீங்கள் அறிந்ததே..

முதல் முறையாக தென்னிந்திய தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால் பதிக்கும் ஆரபி படைப்பகம் )
அதன் நிறுவனர் ராஜீவ் சுப்பிரமணியம் அவர்கள்.
அவரது முயற்சி வெற்றி பெற உங்களுடன் இணைந்து தமிழ் சீ என் என் குழுமத்தினரும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

FINDER திரைப்படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேப் இல் 28.11.22. அன்று இடம் பெற்றது.
அதேநாளில் கனடா ரொறொன்ரோ வரசித்தி விநாயகர் ஆலயத்திலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கனடா வாழ் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து ஆசிநிறைந்த வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

இத்திரைப்படத்தை விநோத் ராஜேந்திரன் இயக்குகிறார்.

பிரபல நகைச்சுவை நடிகர் சார்ள்லி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படம் தாயக, தமிழக, புகலிட கலைஞர்களின் கூட்டிணைவுக்கான முதல் முயற்சியாக இருக்கலாம் என்று ஆரூடம் சொல்கிறது கலை அவதானிகள் தரப்பு…..
ஆகவே ராஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் முயற்சி வெற்றி பெற உங்களுடன் இணைந்து எங்கள் வாழ்த்துகளும்.

கலையால் கலைசெய்வோம் கலைஞர்களை கனம் செய்வோம்
பாரிஸ் பாலம் படைப்பகம் பிரான்ஸ்

படப்பூஜையின் சில நிழற்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.