உணவை பெற்றுக்கொள்ள முடியாததால் தவறான முடிவெடுத்த குடும்பப்பெண்!

கேகாலை அரநாயக்க பிரதேசதத்தில் பொருளாதார சிரமங்களால் உணவை பெற்றுக்கொள்ள முடியாத கஷ்டத்தால் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

அரநாயக்க காவல்துறை பிரிவில் பொஸ்செல்ல, களுகல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதான முதிய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த பெண் தனது கணவருடன் வாசித்து வந்ததுடன் இவர்களின் ஒரே மகள் றம்புக்கனை பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

இந்த பெண்மணியின் கணவர், மாந்திரீக வேலைகளை செய்து, சிறியளவில் பணத்தை சம்பாதித்து வந்துள்ளார்.

 

உணவை பெற்றுக்கொள்ள முடியவில்லை

உணவை பெற்றுக்கொள்ள முடியாததால் தவறான முடிவெடுத்த குடும்பப்பெண்! | Unable To Get Food Woman Commits Suicide

அண்மையில் அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக நடக்க முடியாமல் போனதால், வருமானம் இல்லாமல் போயுள்ளது.

இவர்கள் இருவருக்கும் முதியோர் கொடுப்பனவாக ஆயிரத்து 900 ரூபாவும் கமத்தொழிலாளர் ஓய்வூதியமாக ஆயிரத்து 950 ரூபாவும் என மொத்தமாக 3 ஆயிரத்து 850 ரூபா மாத்திரமே கிடைத்து வந்துள்ளது.

பொருட்கள் விற்பனை செய்யப்படும் விலைக்கு அமைய அந்த பணத்தில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது என்பதால், பெண்மணி பல நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்றைய தினம் வீட்டில் இருந்த விஷ திரவத்தை அருந்தி தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கணவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.