பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங்

சீனாவில் கொரோனா கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போராட்டம் நடத்திய நிலையில் அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தால் பல நகரங்களில் கொரோனா  கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2019ல் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமானது. இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகத்தையுமே இந்த வைரஸ் முடக்கிப்போட்டது.

உருமாறிய கொரோனா வைரஸ் திரிபினால் பல லட்சம் பேர் மரணமடைந்தனர். ஒட்டுமொத்த நாடுகளும் ஊரடங்கில் முடங்கி பொருளாதார இழப்பை சந்தித்தது. மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

சீனாவில் கொரோனா பாதிப்பு

பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங் | China Corona Protest Lockdown Relece Xi Ji Ping

தற்போது பல நாடுகளில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. தடுப்பூசி செலுத்தியது, முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு என்பது மிகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சீனாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு என்பது 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

அதன்படி சீனாவின் காங்சோ, பெய்ஜிங், ஷாங்காய், ஷிஜியாஸ்ஹாங், செங்டு உட்பட பல முக்கிய நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் தான் தனிமையில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட அடுக்குமாடி கட்டடத்தில் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அங்கு வசிக்கும் பிற குடும்பத்தினர் வெளியே வரவும், பிற இடங்களில் இருந்து அங்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தான் சில நாட்களில் ஜின்ஜியாங், மாகாணம் உரும்கி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் இறந்தனர்.

கடும் கொரோனா கட்டுப்பாடுகளால் தான் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து இறந்ததாக தகவல் பரவியது. இந்நிலையில் தான் கடும் கட்டுப்பாடுகளை கைவிட வேண்டும் என உரும்கியில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.

ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும்

பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங் | China Corona Protest Lockdown Relece Xi Ji Ping

இந்த போராட்டம் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியது. இந்த வேளையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் கோஷமிட்டு பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் ஜி ஜின்பிங் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். நாட்டில் வாழும் மக்களின் உயிர் மிகவும் முக்கியம். இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என பிடிவாதம் காட்டினார்.

இது ஒருபுறம் இருக்க பொதுமக்களும் விடவில்லை. அவர்களும் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். சில இடங்களில் காவல்துறையும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தல்

 

பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங் | China Corona Protest Lockdown Relece Xi Ji Ping

பொதுமக்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசினர். இது பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வளர்ந்து வந்தது.

இந்த போராட்டம் மேலும் சில நாட்கள் தொடர்ந்தால் அது வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என அரசு கருதியது. இந்நிலையில் தான் தற்போது சீனாவில் சில இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த சீனா முடிவு செய்துள்ளது.

அதன்படி சீனாவின் காங்சோ, ஷிஜியாஸ்ஹாங், செங்டு உட்பட பல முக்கிய நகரங்களில் கொரோனா கட்டுப்பாட்டுத் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி பொது சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளன.

தினசரி கொரோனா பரிசோதனை

பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங் | China Corona Protest Lockdown Relece Xi Ji Ping

 

மருத்துவம், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தினசரி கொரோனா பரிசோதனைகள் என்பது இன்னும் நடைமுறையில் இருக்கும். மேலும் பெய்ஜிங்கிலும் தொடர்ந்து கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுபற்றி பெய்ஜிங் நகர அரசின் செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் கூறுகையில், ‛‛வீட்டை விட்டு வெளியேறாதவர்களுக்கு மேற்கொள்ளப்படும் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இதில் முதியவர்கள், வீட்டில் இருந்து பணி செய்பவர்கள், ஆன்லைனில் கல்வி பயில்வோரிடம் தினசரி கொரோனா சோதனை செய்யப்படாது. இருப்பினும் கூட கபே, ஓட்டல், வணிக வளாகங்கள் சென்று வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை 48 மணிநேரத்துக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.