எண்ணெய் ஏற்றுமதி-உக்ரைன்க்கு ரஷ்யா பதிலடி
ரஷ்யாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தை குறைக்கும் வகையில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி விலைக்கு மேற்குலகம் புதியவிலை வரம்பை விதித்துள்ளதால் ரஷ்ய பொருளாதாரம் விரைவில் அழிந்துவிடுமென உக்ரைன் எதிர்வு கூறியுள்ளது.
ஆயினும் தனது எண்ணெய் ஏற்றுமதிக்குரிய விலைக்கு உச்சவரம்பை விதிக்கும் நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாதென ரஷ்யா இன்று அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய வருமான ஆதாரத்தை பலவீனப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் மசகு எண்ணெயின் விலையை ஒரு பீப்பாய்க்கு 60 டொலர்களுக்கு மேல் நாடுகள் வழங்க முடியாதென நேற்று அறிவித்த விடயம் இன்று எதிர்வனைகளை தோற்றுவித்துள்ளது.
இந்த நகர்வின் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரம் பலவீனப்படுத்தப்படும் என இன்று அறிவித்துளள உக்ரைன் தமது நாடு இந்த விடயத்தில் இலக்கை அடைந்தே தீரும் எனவும் சூளுரைத்துள்ளது.
ஆயினும் ரஷ்ய எண்ணெய் விலையின் உச்சவரம்பை ஏற்றுக்கொள்ள முடியாதென ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த விலை வரம்புக்கு மேலான விலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை இறக்குமதியை செய்யும் நாடுகளுக்கு அந்த எண்ணெய் கொண்டுசெல்லும் கப்பல்களுக்கு காப்புறுதி செய்யப்படாதென்ற முடிவு வரவுள்ளது.
ஆயினும் ரஷ்ய மசகு எண்ணெயை மலிவு விலையில் இறக்குமதிசெய்யும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இந்த விலைவரம்பு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை